சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணிவரை ஆரஞ்சு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2022-12-12 11:56 GMT

சென்னை,

மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணிவரை ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையம் மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள மழை கணிப்பில்,

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சு, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இரவு 7 மணிவரை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்