தாட்கோ திட்டத்தில் தேர்வு செய்தும்கறவை மாடுகள் வாங்க வங்கி நிர்வாகம் கடன் தர மறுப்புமாவட்ட வருவாய் அலுவலரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு

தாட்கோ திட்டத்தில் தேர்வு செய்தும் கறவை மாடுகள் வாங்க வங்கி நிர்வாகம் கடன் தர மறுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனா்.

Update: 2023-01-02 18:30 GMT

திட்டக்குடி அருகே சிறுமுளை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று புரட்சிபாரதம் மாவட்ட தலைவர்கள் சங்கரலிங்கம், பாலவீரவேல், மாவட்ட பொருளாளர் சந்துரு மற்றும் நிர்வாகிகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு வந்து, மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விவசாய குடும்பத்தை சேர்ந்த நாங்கள் 15 பேர் கறவை மாடுகள் வாங்க கடன் கேட்டு தாட்கோ மூலம் விண்ணப்பித்தோம். அதன்படி கடலூரில் நேர்முக தேர்வு நடந்தது. இதில் மாவட்ட அளவிலான தேர்வு குழு நேர்காணல் நடத்தி, எங்களை தேர்வு செய்தது. இதுபற்றி திட்டக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கும் கடன் வழங்க பரிந்துரை செய்தது. ஆனால் வங்கி நிர்வாகம் எங்களுக்கு கடன் தராமல் மறுத்து வருகிறது. இதுபற்றி கேட்டால், அதற்கான சேவை எங்கள் வங்கியில் இல்லை என்று மறுக்கிறது.

ஆகவே எங்களுக்கு கறவை மாடுகள் வாங்க தலா ரூ.1½ லட்சம் வீதம் வங்கி நிர்வாகம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்