ஓபிஎஸ் மகனும், எம்.பி.யுமான ரவீந்திரநாத் விவாகரத்து கோரி மனு
கருத்து வேறுபாடு காரணமாக ரவீந்திரநாத் எம்.பி. விவாகரத்து கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்துக்கு ஆனந்தி என்பவருக்கு திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே அண்மைக் காலமாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்துவருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கருத்து வேறுபாடு என்ற காரணத்தைக் கூறி அவர் விவாகரத்து கோரியுள்ளார்.இந்த மனு மீதான விசாரணைக்கு விரைவில் வரும் என தெரிகிறது.