ஓபிஎஸ் இருக்கை விவகாரம்; நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை-சபாநாயகர் அப்பாவு

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-24 12:10 GMT

வள்ளியூர்,

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்லது சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து எல்லாமே சட்டப்பேரவை தலைவருடைய முழு பொறுப்பாகும். ஆகவே நேற்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிற்கும் சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீரை விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவின் படி தமிழக சபாநாயகர் அப்பாவு அணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து வைத்தார். பின்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பின்படி ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு செல்லும் என அறிவித்தது. இதனை தொடர்ந்து பொதுக்குழு தீர்மானப்படி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதை செல்லும் என அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சட்டசபையில் அதிமுகவின் உறுப்பினராக இருக்கையில் ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேட்டபோது அதற்கு, சபாநாயகர் அப்பாவு கூறும்போது

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்லது சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து எல்லாமே சட்டப்பேரவை தலைவருடைய முழு பொறுப்பாகும். ஆகவே நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கும் சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்