பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு: ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

இந்த ஆலோசனையில், வைகைச் செல்வன்,எஸ்.பி வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Update: 2022-06-24 06:04 GMT

சென்னை,

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று அதிமுக பொதுக்குழு கூடியது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த மாதம் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு சட்ட விரோதமானது என்று எனவே, 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், வைகைச் செல்வன்,எஸ்.பி வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்