எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: சட்டப்பேரவை தலைவருடன் அதிமுகவினர் சந்திப்பு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர்.

Update: 2023-09-22 05:44 GMT

சென்னை,

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மனு கொடுத்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9-ம் தேதி கூட உள்ள நிலையில் பேரவை தலைவரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள், செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர். சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளை மாற்றக் கோரி அவர்கள் மனு அளித்துள்ளனர்.

எதிர்க்கட்சி துணைத்தலைவரை மாற்ற வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக உதயகுமாரை சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்