போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னங்குறிச்சி
சேலம் கன்னங்குறிச்சி தாமரைநகர் பகுதியில் புதிதாக செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் திரண்டு புகார் கொடுத்தனர். கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயசீலன், மோனிகா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.