கோவையில் இருந்து பழனி வழியாக மதுரை வரும் ரெயில் பயணிகளுக்கு வாய்ப்பு

வருகிற 10-ந்தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதால் கோவையில் இருந்து பழனி வழியாக மதுரை வரும் ரெயில் பயணிகள் பயன்பெறலாம்.;

Update: 2023-04-07 19:56 GMT

வடக்கு எல்லை ரெயில்வே மண்டலம் சார்பில், அருணாசல பிரதேச மாநிலம் இடாநகரில் உள்ள நாகர்லகூன் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வரை முன்பதிவில்லாத ஒருவழி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.05852) நேற்று இரவு 11.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வருகிற திங்கட்கிழமை மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயிலில் 18 பொதுப்பெட்டிகளும், 1 மாற்றுத்திறனாளி பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும்.

கோவையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக மதுரை வரும் பயணிகளுக்கு இந்த ரெயில் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, வருகிற 10-ந் தேதி காலை 10.45 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில், பொள்ளாச்சிக்கு மதியம் 12.18 மணிக்கு வருகிறது. பழனிக்கு மதியம் 1.15 மணிக்கும், திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு மதியம் 2.20 மணிக்கும் வந்து சேரும். அங்கிருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 3.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்