புதிய வாரச்சந்தை திறப்பு

புதிய வாரச்சந்தை திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2022-12-04 18:45 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே அரியக்குடி ஊராட்சி பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் வாரச்சந்தை திறக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் பெரியகருப்பனின் பரிந்துரையின் பேரில் அரியக்குடி காந்தி கல்வி நிலையம் அருகில் புதிய வாரச்சந்தை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாங்குடி எம்.எல்.ஏ, தலைமை தாங்கி திறந்து வைத்தார். சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யாசெந்தில்நாதன் முன்னிலை வகித்தார். முதல் விற்பனையை மாவட்ட கவுன்சிலர் ராதாபாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, துணைத்தலைவர் துரை, அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், காரைக்குடி நகர முன்னாள் இளைஞரணி காரை சுரேஷ் மற்றும் தி.மு.க. கிளை செயலாளர்கள் பழ.ரெங்கநாதன், சிறியமலர் ஆரோக்கியம், முருகையா, ஆரோக்கியசாமி, ராமநாதன், முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்