தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
அம்பை ஒன்றியம் சிவந்திபுரம் தி.மு.க. சார்பாக சிவந்திபுரம் பஸ்நிலையம் அருகில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். அம்பை ஒன்றிய செயலாளரும், யூனியன் தலைவருமான பரணிசேகர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டு, நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், சர்பத், தர்பூசணி பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அருண் தவசுப்பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் மைக்கேல், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
* களக்காடு வடக்கு ஒன்றியம் படலையார்குளம் ஊராட்சி பெல்ஜியம் அரசு மருத்துவமனை முன்பு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வ கருணாநிதி சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதை தலைமை செயற்குழு உறுப்பினர் அ.பிரபாகரன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி மற்றும் பழவகைகளை வழங்கினார். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன், நகர செயலாளர் மணி சூரியன், ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.