பக்தர்களுக்கு குடிநீர் பந்தல் திறப்பு
குலசேகரன்பட்டினத்தில் பக்தர்களுக்கு குடிநீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக முத்து சுப்பிரமணிய சுவாமி அறக்கட்டளை சார்பில் 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் பந்தல் குலசேகரன்பட்டினம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்கி, குடிநீர் பந்தலை தொடங்கி வைத்தார். இதில் உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி, செயற்பொறியாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இலவச குடிநீருக்கான ஏற்பாடுகளை நல்லூர் ஈஸ்வரன் செய்திருந்தார்.