2 பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
2 பகுதி நேர ரேஷன் கடைகளை கலெக்டர் திறந்து வைத்தார்.;
நாட்டறம்பள்ளி அருகே உள்ள பி.பந்தாரப்பள்ளி மற்றும் பள்ளத்தூர் ஆகிய இடங்களில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ரிப்பன் வெட்டி ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேவராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், நாட்டறம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலா, ஒன்றியக் குழு தலைவர் வெண்மதி முனுசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், கூட்டுறவு சார் பதிவாளர் பூவண்ணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.