தென்காசியில் வி.வி.ஐ.பி. நகர் தொடக்க விழா

தென்காசியில் வி.வி.ஐ.பி. நகர் தொடக்க விழா நடந்தது

Update: 2022-09-06 14:51 GMT

தென்காசியில் வி.வி.ஐ.பி. நகர் தொடக்க விழா நடந்தது.

தொடக்க விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆஞ்சநேயர் கோவில் எதிர்புறம் உள்ள அருணாச்சலம் நகரை அடுத்து புதிதாக வி.வி.ஐ.பி. நகர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் நடத்தி வரும் பிரபல நிறுவனமான பானு புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தினர் அமைத்துள்ளனர்.

இதன் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அரசு முதல் நிலை ஒப்பந்ததாரர் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் அருணாச்சலம் செட்டியார், பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.சுப்பிரமணிய ராஜா, இசக்கி குழுமம் தங்கபாண்டியன், வக்கீல் கோபாலகிருஷ்ணன், விழுப்புரம் தங்க நகை கடை அதிபர் ரஹமத்துல்லா மற்றும் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடு

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பானு புரமோட்டர்ஸ் அதிபர் அன்சாரி மற்றும் அவரது சகோதரர் ராஜா என்ற பக்ருதீன் அலி அகமது ஆகியோர் வரவேற்றனர்.

விழா ஏற்பாடுகளை மேலாளர் மோகன், மேற்பார்வையாளர் தாஜுதீன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

புதிதாக தொடங்கப்பட்ட வி.வி.ஐ.பி. நகர் குறித்து இதன் அதிபர் அன்சாரி கூறியதாவது:-

வசதிகள்

இந்த நகர் டி.டி.சி.பி. உரிமம் பெற்றது. இங்கு உடனே வீடு கட்டி குடியேறலாம். வாடகை வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. நல்ல குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளது. பிரமாண்டமான நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் 2 தென்னங்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த நகரை சுற்றி வீடுகள் உள்ளன.

நல்ல சாலை வசதி, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளது. குற்றாலம் அருவிகள், பள்ளி-கல்லூரிகளும் அருகில் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் மனையை பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், இலவச பத்திரப்பதிவும் செய்து கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்