5 ஏக்கர் நிலம் இருந்தால் திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடங்கலாம் - பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு

5 ஏக்கர் நிலம் இருந்தால் திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடங்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

Update: 2022-05-20 23:22 GMT

சென்னை,

பல்கலை க்கழக மானியக்குழுவின் விதி, 1989-ன் படி, திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு, அடிப்படை வசதிகள் கொண்ட 40 முதல் 60 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்று இருந்தது. தற்போது அதில் பல்கலைக்கழக மானியக்குழு தளர்வுகளை அறிவித்து இருக்கிறது.

அதன்படி, திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு, 40 முதல் 60 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, அடிப்படை வசதிகளை கொண்ட 5 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து பல்கலை க்கழக மானியக்குழு தலை வர் எம்.ஜெகதீஷ்குமார் கூறும்போது, '40 முதல் 60 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற முந்தைய விதிகளின்படி, நகரங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இதுபோன்ற நிலங்கள் வாங்குவது மிகவும் கடினம் என்பதாலும், மாணவர்கள் முழு நே ரம் வளாகத்தில் இருக்க போவதில்லை என்பதாலும், தற்போது 5 ஏக்கர் நிலமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கும், தொலை தூர மற்றும் ஆன்லைன் கல்வியில் அதிக நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் அதிக மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற் கும் இது சிறந்த யோனையாக இருக்கும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்