வீட்டின் பூட்டை திறந்து நகை, பணம் திருட்டு
சிப்காட் அருகே வீட்டின் பூட்டை திறந்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.;
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 47). இவர் மாட்டு வண்டி வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் நேற்று காலை மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டு தொழிலுக்கு சென்று விட்டார். அதே வீட்டில் உள்ள இவரது மைத்துனர் சரத்குமார் (26) என்பவர், நேற்று பகல் 11 மணிஅளவில் வீட்டை பூட்டி விட்டு, வெளியில் சென்றார். பிற்பகல் சுமார் 2 மணி மணியளவில் சரத்குமார் திரும்பி வந்து வீட்டை பார்த்தபோது, வீட்டின் பூட்டு காணாமல் போயிருந்தது. உள்ளே போய் பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.