ஊட்டி ஆப்பிள் சீசன் தொடங்கியது

குன்னூரில் ஊட்டி ஆப்பிள் சீசன் தொடங்கியது

Update: 2022-06-28 15:07 GMT

குன்னூர், 

நீலகிரி மாவட்டம் குளிர்பிரதேசமாக உள்ளது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தி பயிரிடப்பட்ட பிளம்ஸ், பீச், பேரி, கமலா ஆரஞ்சு, போன்ற பழ வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ குணம் வாய்ந்த பழங்களான தவிட்டு பழம், ஊசி கிளாப்பழம் போன்றவை வனப்பகுதியில் காணப்படுகிறது. குன்னூர் பகுதியில் அதிக இடங்களில் ஊட்டி ஆப்பிள் என அழைக்கப்படும் பச்சை ஆப்பிள் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த பழத்தின் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. மரங்களில் கொத்து, கொத்தாக ஊட்டி ஆப்பிள் காய்த்து குலுங்குகிறது.

சிம்லா, காஷ்மீர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆப்பிளின் வண்ணங்களை போல் அல்லாமல், இந்த ஆப்பிள் பச்சை நிறத்தில் காணப்படுவது தனி சிறப்பு. மேலும் இனிப்பு இல்லாமல், புளிப்பு அதிகமாக இருக்கும். குன்னூர் சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில் உள்ள மரங்களில் ஊட்டி ஆப்பிள் விளைந்து உள்ளது. ஆப்பிள் மரங்கள் அழிவை நோக்கி செல்வதால், இதனை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்