ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் - பால்வளத்துறை அமைச்சர் நாசர்

ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-24 09:16 GMT

சென்னை,

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை செய்து வருகின்றது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில்

தற்போது பால் விற்பனையுடன் மோர், தயிர், வெண்ணெய், நெய், லஸ்சி, பனீர், யோகர்ட், பாதாம் பவுடர், உலர் பழ கலவை, குலாப் ஜாமுன் மிக்ஸ், பால் பவுடர், ஐஸ் கிரீம்கள், சாக்லெட்கள், குலாப் ஜாமுன், பால்கோவா, பால்பேடா, மைசூர்பாகு, ரசகுல்லா, டீ-காபி, பேவர்டு மில்க், மில்க்ஷேக், வே டிரிங் போன்ற பலவகையான பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆவின் நிறுனத்தில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இந்த நிலையில் ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும். மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்