காங்கிரசால் மட்டுமே பா.ஜனதாவை எதிர்க்க முடியும்-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு

காங்கிரசால் மட்டுமே பா.ஜனதாவை எதிர்க்க முடியும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

Update: 2022-11-21 18:45 GMT

தேவகோட்டை,

காங்கிரசால் மட்டுமே பா.ஜனதாவை எதிர்க்க முடியும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

முப்பெரும் விழா

தேவகோட்டை காந்தி ரோடு அல்மஸ்ஜிதுன் நூர்பள்ளிவாசல் அருகில் தேவகோட்டை முஸ்லிம் ஜமாத் அல்மத்ரஸத்துஸ்ஸலாமிய்யா குர்ஆன் மனப்பாட சாலை பெண்கள் அரபிக்கல்லூரியின் முப்பெரும் விழா, 13-ம் ஆண்டு விழா, அனைத்து சமுதாய மக்கள் நல்லிணக்க விழா மற்றும் அரபிக்கல்லூரி மதரஸாக்களின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தேவகோட்டை முஸ்லிம் ஜமாத்தலைவர் கமருல் ஜமான் தலைமை தாங்கினார். முஸ்லிம் ஜமாத் செயலாளர் சேகுமைதீன், அல்மத்ரஸத்துஸ் ஸலாமிய்யா மதரஸா செயலாளர் அப்துல் ரஜாக், முன்னாள் கவுன்சிலர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தனர்.

சிவகங்கை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் இனாயத்துல்லா கீதம் பாடினார். பொருளாளர் ஆதம் மாலிக் வரவேற்றார். நிர்வாக கமிட்டி உறுப்பினர் முகமது யாசின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பா.ஜனதாவை எதிர்க்க முடியும்

இந்த விழாவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

தற்போது இந்தியாவில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதில் முழுமையாக நாள்தோறும் உணர்ந்து கொண்டிருப்பவர்கள் சிறுபான்மை சமூகத்தவர்கள். இது போன்ற நிலைமை எந்த ஒரு சமுதாயமும் தினந்தோறும் சந்திப்பது கிடையாது. 2014-ம் ஆண்டில் இருந்து இந்த நெருக்கடி வந்துள்ளது.

பாரதீய ஜனதா கட்சியுடன் எந்த காலத்திலும் உறவு வைத்துக் கொள்ளாத ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மட்டுமே. அதுமட்டுமின்றி அந்த கட்சியை எதிர்க்கும் ஒரே கட்சியும் கூட. இந்த கட்சியின் சார்பில் பகிரங்கமாக கூறுகிறேன். மதசார்பற்ற மத நல்லிணக்கம் வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சி வேண்டும்.

காங்கிரசில் சேருங்கள்

சிறுபான்மையினரான முஸ்லிம்கள் நீங்கள் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக வேண்டும். அதை நீங்கள் தவிர்க்கிறீர்கள். அரசியலை விட்டு ஒதுங்க சமுதாய கட்சிகளில் சேர்ந்து அடங்கி விடுகிறீர்கள் என்றால் உங்களை மற்ற கட்சியும் ஒதுக்கி விடுவார்கள். உங்கள் அரசியல் கட்சி எங்களிடம் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தால் அந்த அரசியல் கட்சிக்கு தான் சீட்டு ஒதுக்குமே தவிர உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விடும். இதனால் நீங்கள் எங்கள் கட்சியில் வந்து சேர வேண்டும்.அல்லது மதசார்பற்ற மற்ற அரசியல் கட்சிகளில் சேர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி. சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்நாதன், மாங்குடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மீராஉசேன், தி.மு.க. நகர செயலாளர் பாலமுருகன், தேவகோட்டை தே.பிரித்தோ பள்ளி அதிபர் மற்றும் தாளாளர் வின்சென்ட் அமல்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிவகங்கை மாவட்ட தலைவர் ஹைதர் அலி, திராவிடர் இயக்க பேச்சாளர் மதிமாறன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்