ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம்: கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.;

Update: 2022-10-07 13:59 GMT

சென்னை,

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்புக்குரியது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்க்கான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது தடுக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதற்கு பிந்தைய 14 மாதங்களில் 29 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அவை இனி தடுக்கப்படும். அந்த வகையில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் வரவேற்கத்தக்கது.

இம்மாத இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு மாற்றான சட்டத்தை நிறைவேற்றவும், அதை நீதிமன்றங்களில் பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்