கவர்னர் பதவி இல்லையென்றால்ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்க முடியும்: கனிமொழி எம்.பி.

கவர்னர் பதவி இல்லையென்றால்ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்க முடியும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்;

Update: 2022-11-28 18:45 GMT

தூத்துக்குடியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி திங்கட்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் காலாவதியாகி உள்ளது. கவர்னர் பதவி என்பதே காலாவதியான விஷயம். அந்த பதவி இல்லையென்றால், இந்நேரம் ஆன்லைன் ரம்மியை ஒழித்து இருக்க முடியும். எதை முதலில் செய்ய வேண்டும் என்று நமக்கே தெரியும். கவர்னர் பதவி தேவையில்லாத ஒன்று. அந்த பதவி இல்லாமல் போனாலே பல சிக்கல்கள் தீர்ந்து விடும். எதற்காக ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்