தொண்டி,
திருவாடானை யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிகள் கணக்கு திட்டம் குறித்த பயிற்சி நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஊராட்சி நிதிகள் இணையதளத்தின் மூலம் பண பரிவர்த்தனை செய்வது தொடர்பாக செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் திருவாடானை யூனியனை சேர்ந்த 57 ஊராட்சி மன்ற ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.