ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது
மயிலாடுதுறை அருகே ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது
மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலின்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நல்லத்துக்குடி பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் ஆன்லைனில் வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த செந்தில்குமார் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.