ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

Update: 2022-10-02 18:13 GMT

கீழக்கரை,

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மக்கள் டீம் சார்பில் முகைத்தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஆன்லைன் மோசடியில் இருந்து பொது மக்கள் தற்காத்து கொள்வது குறித்தும் பொதுமக்கள் இதுகுறித்து காவல் துறைக்கு புகார் அளிப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப் பட்டது. சைபர் கிரைம் மாவட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், கீழக்கரை போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் ஆகியோர்ஆன்லைன் மோசடி குறித்து விளக்கம் அளித்தனர். கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் என்ஜினீயர் சுல்தான் சம்சுல் கபீர் வரவேற்றார். பள்ளி தாளாளர் மவுலா முகைதீன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் முகைதீன் இபுராகிம், இந்தியன் ரெட் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரம், வர்த்த சங்கத் தலைவர் செய்யது ஜகுபர் சாகுனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சரவணன், டாக்டர் செய்யது ராசிக்தீன், ரோட்டரி சங்க துணை மண்டல ஆளுநர் பாபு, மக்கள் டீம் துணை தலைவர் முகமது அப்துல் காதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் டீம் செயலாளர் காதர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்