புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி..!
புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகினார்.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மையத்தில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டதால் முதியவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 427 பேர் கொரோனாவிற்காக உயிர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் எட்டு பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.