தளி
போடிபட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது போடிபட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த கண்ணப்பன் (வயது47) என்பவர் வீட்டில் வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கண்ணப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
------------