மேலும் ஒருவர் கைது

ரேஷன் அரிசி கடத்திய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-29 19:16 GMT

விருதுநகரில் கடந்த 24-ந் தேதி லாரியில் கடத்தப்பட்ட 61 மூடைகளில் இருந்த 3 டன் 50 கிலோ ரேஷன் அரிசி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரையை சேர்ந்த பூவலிங்கம், பாண்டியராஜன், ஜான் ராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் மேல் விசாரணை மேற்கொண்டதில் சிவகாசி தாலுகா மாங்குளத்தை சேர்ந்த மகாதேவன் (வயது 33) என்பவர் இந்த ரேஷன் அரிசி மூடைகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் நேற்று அவரை கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே மகாதேவன் மீது 4 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு உள்ளதாக உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட்மேரி தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்