டாஸ்மாக் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

டாஸ்மாக் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-29 18:45 GMT

காரியாபட்டி, 

திருச்சுழி டாஸ்மாக் கடையில் சம்பவத்தன்று பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக மர்ம நபர்களை தேடி வந்தனர். ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது நரிக்குடி அருகே உள்ள விடத்தக்குளம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (வயது 24), என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலம்பரசன் என்பவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்