டாஸ்மாக் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
டாஸ்மாக் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
காரியாபட்டி,
திருச்சுழி அருகே பள்ளிமடம் பகுதியிலுள்ள அரசு டாஸ்மாக் கடையில் கடந்த ஏப்ரல் மாதம் மர்ம கும்பல் புகுந்து ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 2 பேரை திருச்சுழி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் மேலும் சிலரை திருச்சுழி போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது அரசு டாஸ்மாக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச்சென்ற சிவகங்கை மாவட்டம், சுந்தரநடப்பு பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது22) என்பவரை செல்போன் சிக்னலை வைத்து திருச்சுழி போலீசார் கைது செய்தனர்.