மேலும் ஒருவர் கைது

மோட்டார் சைக்கிள் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-07-26 20:15 GMT

காரியாபட்டி, 

நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 22). வக்கீல். இவர் மேலேந்தல் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளை காட்டிமிரட்டி அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். இதுகுறித்து வக்கீல் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் நரிக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இ்ந்த வழக்கு தொடர்பாக அபிஷேக் என்பவரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் வீரசோழன் மேல பருத்தியூரை சேர்ந்த பூ பாண்டி (23) என்பவரையும் நரிக்குடி போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்