காட்டு யானை மிதித்து ஒருவர் சாவு

அச்சன்கோவில் அருகே காட்டு யானை மிதித்து ஒருவர் பரிதாபமாக பலியானார்.

Update: 2022-08-29 16:02 GMT

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கிருந்து கேரள மாநிலம் புனலூர் செல்லும் காட்டுப்பாதையில் சுமார் ஒரு வாரமாக காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது.

நேற்று முன்தினம் அந்த வழியாக வந்த ஒரு கேரள மாநில அரசு பஸ்சை காட்டு யாைன மறித்து நின்றது. பஸ்சில் இருந்த பயணிகள் யானையை வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த யானை சென்ற பிறகு பஸ் சென்றது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த வழியாக சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை காட்டு யானை மிதித்து கொன்றுள்ளது. ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து அச்சன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்