ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.;
புதுக்கோட்டை தெற்கு 4-ம் வீதி மார்க்கெட் சந்திப்பில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலக நன்மைக்கும், அனைவரும் முழு சுகாதாரத்துடன் வாழவும், மாணவ, மாணவிகள் சிறப்பாக கல்வி கற்கவும் ஏகதின லட்சார்ச்சனை, லட்சுமி, கணபதி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இந்த லட்சார்ச்சனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.