ஓணம் பண்டிகை: உப்பள்ளி-கொச்சுவேலி இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்

உப்பள்ளி-கொச்சுவேலி இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2024-09-12 01:24 GMT

சென்னை,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி (ஸ்ரீசித்தரோட சுவாமி உப்பள்ளி)-கொச்சுவேலி (கேரளா) இடையே ஒருமுறை இயங்கும் வகையில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-கொச்சுவேலி சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07333) நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.55 மணிக்கு உப்பள்ளியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.

மறுமார்க்கமாக கொச்சுவேலி-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி சிறப்பு ரெயில் (07334) நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொச்சுவேலியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.

இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிகர், தாவணகெரே, பீரூர், அரிசிகெரே, துமகூரு, சிக்கபானவாரா, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவள்ளா, செங்கனூர், காயன்குளம் மற்றும் கொல்லம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்