ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.;

Update:2023-08-30 01:06 IST

கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். தாளாளர் லியோ பெலிக்ஸ் லூயிஸ், நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி, இயக்குனர் குமுத ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவினை கல்லூரியின் முதல்வர் கவிதா தொடங்கி வைத்து பேசினார். அனைத்து துறை மாணவிகளும் ஒன்று சேர்ந்து அத்தப்பூ கோலம் வரைந்தும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர். கேரள மாநிலத்தில் இருந்து படிக்கும் மாணவிகள் மலையாளத்தில் தங்களுடைய பண்டிகை குறித்து பேசினர். முன்னதாக பாலசுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் ஆடை வடிவமைப்பியல் துறைத்தலைவர் பரணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்