வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் குவிலென்சுகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை-நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் குவிலென்சுகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்
வால்பாறை,
வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் குவிலென்சுகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.
40 கொண்டை ஊசி வளைவுகள்
வால்பாறை -பொள்ளாச்சி சாலையில் மொத்தமுள்ள 65 கிலோமீட்டர் தொலைவிலான சாலையில் 25 கிலோ மீட்டர் சாலை மட்டுமே சமவெளிப் பகுதி சாலையாக உள்ளன. மீதமுள்ள 40 கிலோமீட்டர் சாலை 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைப்பாதை ஆகும்.
இந்த மலைப்பாதை சாலை ஆழியாறு சோதனை சாவடியில் இருந்து தொடங்குகிறது. இந்த சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதியில் எதிரே வரக்கூடிய வாகனங்களுக்கு வழிவிட்டு செல்வதற்கு வசதியாகவும் எதிரே வரக்கூடிய வாகனம் எந்த வகையான வாகனம் என்பதை தெரிந்து கொண்டு விபத்துகள் ஏற்படாமல் வாகன ஓட்டிகள் எளிதாக செல்வதற்கு வசதியாகவும் புதிதாக வால்பாறை மலைப் பாதையில் குவிலென்சுகள் பொருத்தப்பட்டன. மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் குவிலென்சுகள் அமைக்கப்பட்டன.
கடும் நடவடிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட இந்த குவிலென்சுகளை சுற்றுலா பயணிகள் உடைத்து சேதப்படுத்தியதை தொடர்ந்து கடந்த ஆண்டு மீண்டும் புதிய வகையிலான குவிலென்சுகளை நெடுஞ்சாலை துறையினர் அமைத்தனர். ஆனால் தொடர்ந்து கொண்டை ஊசி வளைவுகளில் அமைக்கப்பட்ட குவிலென்சுகளை சுற்றுலா பயணிகள் மற்றும் ஒருசில மர்மநபர்கள் சேதப்படுத்தி வருகிறார்கள்.
11 -வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள குவிலென்ைச சுற்றுலா பயணிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். விபத்தை தடுத்து உயிரை காக்கும் பணியை செய்து வரும் இந்த குவிலென்சுகளை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்தக்கூடாது. இதுகுறித்து கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.