கம்பத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கம்பத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-09-30 16:52 GMT

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கம்பம் மெட்டு வழியாக கனிம வளங்களான ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்டவை தினந்தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கிடையே எம்- சாண்ட் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அதிகாரிகள் சோதனை செய்வார்கள். அப்போது அதிக பாரம் ஏற்றி வருவதாக கூறி ஆர்.டி.ஓ. அபராதம் விதிப்பதுடன், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. அப்போது கம்பம்-கம்பம்மெட்டு புறவழிச்சாலையோரத்தில் டிப்பர் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்