கம்பத்தில்லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்
கம்பத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;
கம்பம் ஏ.எம்.சர்ச் தெருவில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கம்பம் புதுப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்பாஸ் (வயது 63) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 642 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.