கம்பத்தில்கார் டிரைவரை தாக்கி வழிப்பறி:தொழிலாளி கைது

கம்பத்தில் கார் டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-31 18:45 GMT

கேரள மாநிலம் பாரத்தோடு பகுதியைச் சேர்ந்தவர் துகேத் (வயது 37). கார் டிரைவர். நேற்று முன்தினம் இவர், கம்பத்திற்கு வந்தார். பின்னர் கோசந்திர ஓடை அருகே உள்ள ஒர்க் ஷாப்பிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த ஒருவர் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினார். துகேத் பணம் தர மறுத்ததால் ஆத்்திரமடைந்த அந்த நபர் கீழே கிடந்த கல்லை எடுத்து அவரை தாக்கிவிட்டு ரூ.700-யை பறித்து விட்டு தப்பி ஓடினார். காயமடைந்த துகேத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அவர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் துகேத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டது கம்பம் குரங்கு மாயன் தெருவை சேர்ந்த தொழிலாளியான சத்தியராஜ் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்