வைகுண்ட ஏகாதசியையொட்டிதிருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு"கோவிந்தா கோவிந்தா" என கோஷம் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-02 18:45 GMT

நெல்லிக்குப்பம்

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மையான இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்தாண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. இதையடுத்து தேவநாதசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, நேற்று முன்தினம் முடிவடைந்தது.

சொர்க்கவாசல் திறப்பு

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் முன்பு மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையடுத்து காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து தேசிகர் எதிர்சேவை நடைபெற்றது.

அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

ராப்பத்து உற்சவம்

இதைத்தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். விழாவில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் நேற்று இரவு ராப்பத்து உற்சவம் தொடங்கியது. மேலும் வருகிற 8-ந்தேதி தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் காலை 5.50 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோஷங்களை எழுப்பி சாமிதரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்