தை அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம்
தை அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.;
தை அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.
இந்துக்கள் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு அமாவாசை நாட்களில் தர்ப்பணம் அளிப்பார்கள். ஆண்டுதோறும் அமாவாசை திதிகளில் தர்ப்பணம் அளிக்க முடியாதவர்கள் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய அமாவாசைகள் தர்ப்பணம் செய்ய சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுகிறது.
அதன்படி தை அமாவாசையான நேற்று வேலூர் முத்துமண்டபம் மற்றும் பாலாற்றில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். பின்னர் அவர்கள் ஆற்றில் புனிதநீராடினர். மேலும் வீடுகளில் முன்னோர்களின் படங்களுக்கு படையலிட்டு காக்கைக்கு உணவு படைத்து பிறருக்கு அன்னதானமும் வழங்கினர்.