சுதந்திர தினவிழாவை முன்னிட்டுகடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கடலோர பாதுகாப்பு தூத்துக்குடி மாவட்டகடற்கரை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட கடல்வழியாக பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடலோர பாதுகாப்பு போலீசார் படகுகளில் கடலுக்குள் ரோந்து சென்று கண்காணித்தனர். அதே போன்று தீவு பகுதிகளிலும் அந்நியர்கள் நடமாட்டம் உள்ளதா என்று தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.