ஆடி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

ஆடி மாத 3-வது சனி்க்கிழமையையொட்டி குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

Update: 2022-08-06 14:59 GMT

சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத சனிக்கிழமைகளில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி ஆடி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார்.

விழாவையொட்டி பக்தர்கள் சுரபி நதியில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். மேலும் விளக்கேற்றியும் வழிபட்டனர். விழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதற்கிடையே கோவிலின் முன்பு சுரபி நதியில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இதில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உடை மாற்றும் அறை இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சுரபி நதியில் நீராடும் பக்தர்கள் விட்டு செல்லும் துணிகள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஏலம் விடப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் நீராடுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. துணிகள் காலில் சுற்றி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்