உடன்குடியில் பொருளாதார முன்னேற்றம் குறித்துபெண்களுக்கு பயிற்சி முகாம்
உடன்குடியில் பொருளாதார முன்னேற்றம் குறித்து பெண்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
உடன்குடி:
கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களின் பொருளாதார முன்னேற்றம், சிக்கனம், சிறுசேமிப்பு குறித்த ஓரு நாள் பயிற்சி முகாம் உடன்குடியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது.
இந்த அமைப்பின் நிறுவனரும், இயக்குநருமான சுந்தரேசன் தலைமை வகித்து, பெண்கள் குடும்பங்களில், தொழில் நிறுவனங்களில் சிக்கனமாக வாழ்வது, சிறுசேமிப்பு பழக்கத்தால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், சேமிப்பு பழக்கத்தை குழந்தைப் பருவத்திலேயே உருவாக்குவது, கிராமப்பு சேமிப்பு ஆகியவை குறித்து பேசினார். முகாமில் கிராம உதயம் அலுவலர்கள் ராமச்சந்திரன், பிரேமா, முத்துசெல்வன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.