திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில்முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவு மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய லைட் முதியோர் இல்லத்தில் முதல்வர்து.சி.மகேந்திரன் ஆலோசனைப்படி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம்சைலன்ட் நைட் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) வேலாயுதம் தலைமை தாங்கி, சிறப்புரை ஆற்றினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். லைட் முதியோர் இல்லத்தின் நிறுவனர் பிரேம்குமார், முதியோர் இல்லம் குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் இயற்பியல் துறை பேராசிரியர் பாலு கலந்து ெகாண்டார். கல்லூரி மாணவ, மாணவிகள் 25பேர் முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகளை நடத்தி முதியோர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் 120-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கல்லூரி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆங்கிலத்துறை பேராசிரியர் தாவூதுராஜா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ச.மோதிலால் தினேஷ் நன்றி கூறினார்.
மேலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமவாய்ப்பு மையம் சார்பில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனைப்படி 'மன அழுத்தத்திற்கான விழிப்புணர்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு கணினித்துறை தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியை மற்றும் சமவாய்ப்பு மையத்தின் ஆலோசகர் கு.ராமஜெயலட்சுமி வரவேற்று பேசினார். விலங்கியல்துறை உதவிப்பேராசிரியை ஆரோக்கியமேரி பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் ெசய்தார். நாசரேத் மர்காஷியஸ் ஆங்கிலத்துறை பேராசிரியர் கேரட்ராஜா இம்மானுவேல், மன அழுத்தத்தை கண்டறிவது எப்படி? மன அழுத்தத்தின் நிலைகள், மன ரீதியான உடல் ரீதியான மன அழுத்தத்திற்கான தீர்வுகளை எடுத்துரைத்தார். மாணவர்கள் எழுப்பிய உளவியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில்கள் அளித்தார். இக்கருத்தரங்கில் இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டனர். இளங்கலை 2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் திலீபன் நன்றி கூறினார். கருத்தரங்கில் பேராசிரியைகள் ரீட்டா யசோதா, முனீஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.