கயத்தாறில் இந்து முன்னணி சார்பில்வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பு
கயத்தாறில் இந்து முன்னணி சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;
கயத்தாறு:
இந்து முன்னணி சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கயத்தாறிலுள்ள சுதந்திர போராட்ட தியாகி வீரபாண்டிய கட்டபொம்மனின் மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேஷ், கயத்தாறு ஒன்றிய கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தலைவர் ஜெயச்சந்திரன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர் சிவசங்கரன், நகர தலைவர் வேலாயுதம், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய தலைவர் பால்ராஜ், கழுகுமலை நகர செயலாளர் ராஜா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.