தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில்கிராமம் செல்வோம் திட்ட முகாம்

தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் கிராமம் செல்வோம் திட்ட முகாம் நடந்தது.;

Update: 2023-04-11 18:45 GMT

ஆறுமுகநேரி:

தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் சார்பில் ஆத்தூரை அடுத்துள்ள சேர்ந்தபூமங்கலம் கிராமத்தில் கிராமம் செல்வோம் என்ற திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாநில நுகர்வோர் பேரவை தலைவர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரி, சக்தி, அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, திருமண உதவி திட்டம், கல்வி கடன், தொழில் கடன் ஆகியவை பெறுவது எப்படி? என்பது குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. முடிவில் தங்கதுரை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்