தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது;
தேனி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் காந்தி பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பள்ளி அளவிலான போட்டியில் முதல் 3 இடம் பிடித்தவர்கள், கல்லூரி அளவிலான போட்டியில் முதல் 3 இடம் பிடித்தவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசு பிரிவில் 2 பேர் ஆகியோருக்கு பரிசு தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் இளங்கோ மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.