கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி சார்பில் மரம் நடுதல் குறித்து ஆலோசனை கூட்டம்
கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி சார்பில் மரம் நடுதல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டுநல பணித்திட்ட அணிகள் 49 மற்றும் 50 சார்பில் 75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கல்லூரி முதல்வர் ஜெயந்தியின் வழிகாட்டுதலின்படி "என் மனம் என் நாடு" என்ற திட்டத்தின் கீழ் மாநாடு தண்டுபத்து பஞ்சாயத்தில் மரம் நடுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு தண்டுபத்து, நரிக்குளம் அருகே 75 மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்யப்பட்டது. இதில், பஞ்சாயத்து துணை தலைவர் அரவிந்தன், செயலாளர் ராஜலிங்கம், கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.