நுகர்வோர் பேரவை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

குலசேகரன்பட்டினத்தில் நுகர்வோர் பேரவை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.;

Update: 2022-09-18 18:45 GMT

உடன்குடி:

தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் திருச்செந்தூர் தாலுகாவில் 1000 மரங்கள் நடவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் கட்ட தொடக்க விழா குலசேகரன்பட்டினத்தில் நடந்தது. பேரவையின் மாநில தலைவர் ஏ.வி.பி.மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். ஆத்தூர் பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கினார். சிறப்பு விருந்தினராக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேரவையைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் நடேசஆதித்தன், மாவட்ட சட்ட ஆலோசகர் திலீப்குமார், மாவட்ட செயலாளர் சண்முகநாதன், திருச்செந்தூர் வட்டார தலைவர் ரகுமத்துல்லா, குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து துணைத்தலைவர் கணேசன், 8-வது வார்டு உறுப்பினர் பசீர், குலசை நகர ஆலோசகர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.  குலசை நகர பொறுப்பாளர் பேச்சிமுத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்