ஆத்தூரில் தொண்டு அமைப்பு சார்பில்நலத்திட்ட உதவி வழங்கல்

ஆத்தூரில் தொண்டு அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-10-12 18:45 GMT

ஆறுமுகநேரி:

சாகுபுரம் டி.சி.டபிள்யு நிறுவனத்தின் சார்பு அமைப்பான ஆன்மா தொண்டு அமைப்பு சார்பில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவிற்கு நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். ஆத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கமால்தீன் முன்னிலை வகித்தார்.

விழாவில் சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் கொழுவைநல்லூர் ஆர் சி தொடக்கப்பள்ளி, ஆறுமுகநேரி திரவியம் தொடக்கப்பள்ளி முக்காணி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலுள்ள மாணவ, மாணவியருக்கு சீருடை, நோட்டு புத்தகங்கள், மேசை மற்றும் நாற்காலி, ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கணினி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு நீர் சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவ உதவி தொகை மூன்று நபர்களுக்கும், கல்வி உதவித்தொகை 15 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்னாள் அறங்காவலர் அண்ணாமலை சுப்பிரமணியம், நகர பஞ்சாயத்து உறுப்பினர் பாலசிங், ஆன்மா தொண்டு நிறுவன நிர்வாகிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்