உலக தண்ணீர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்

உலக தண்ணீர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் 22-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-03-21 10:03 GMT

திருவள்ளூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வருகின்ற 22-ந் தேதி கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் சுகாதாரம் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் ஊராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்கள் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்